குன்றத்தூர் முருகன் துணை!

குன்றத்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் என்ற குன்றத்தூர் முருகன் கோயில் என்பது சென்னையின் புறநகர் பகுதியான காஞ்சிபுரம் மாவட்டத்தின் குன்றத்தூர் என்னும் ஊரில் அமைந்துள்ளது. முருகன் வள்ளி தெய்வானையுடன் திருப்போரில் இருந்து திருத்தணிக்கு செல்லும் வழியில் இங்கு தங்கி ஒய்வு எடுத்து சென்றதாக வரலாறு.

இக்கோயில் பன்னிரெண்டாம் நூற்றாண்டில் இரண்டாம் குலோத்துங்க சோழனால் கட்டப்பட்டது. 1726-ஆம் ஆண்டில் மதுரை நாயக்கரால் மேம்படுத்தப்பட்டது. குன்றத்தூர் முருகன் கோயில் சுமார் 900 ஆண்டுகளாகப் பக்தர்களால் வழிபடுவதாக கூறப்படுகிறது. குன்றத்தூர் முருகன் கோவில் கிபி 10ஆம் நூற்றாண்டில் சோழர்களால் கட்டப்பட்டது இந்த குன்றத்தூர் முருகன் கோவில். தமிழ்நாட்டில் தொண்டை மண்டலத்தில் மிகவும் முக்கியமான முருகன் கோவில் ஆகும்.

வல்லக்கோட்டை
முருகன் கோவில்

வல்லக்கோட்டை முருகன் கோயில் இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தின் காஞ்சிபுரம் மாவட்டத்தில் திருப்பெரும்புதூரிலிருந்து செங்கல்பட்டு செல்லும் சாலையில் 12 கிமீ தொலைவில் அமைந்துள்ள இந்து சமய முருகன் கோயிலாகும். 1200 ஆண்டுகள் தொன்மையானதாக கருதப்படும் இக்கோயிலின் மூலவர் (முருகன்) திருவுருவம் ஏழு அடி உயரம் உள்ளது; இந்தியாவில் அமைந்துள்ள முருகன் திருவுருவச்சிலைகளில் இதுவே உயரமானதாகும். முருகனின் இரு புறங்களில் வள்ளி, தெய்வானை உள்ளனர். கருவறையைத் தவிர கோயில் சுற்றுகையில் கணபதி, உற்சவ திருவுருவம், சண்முகர் மற்றும் அம்மனுக்கு சன்னதிகள் உள்ளன. அருணகிரிநாதரின் ஏழு திருப்புகழ் பாடல்களில், இக்கோயில் இடம் பெற்றுள்ளது.

சிறுவாபுரி
முருகன் கோவில்

சிறுவாபுரி முருகன் கோவில் தமிழ்நாட்டின் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள சின்னம்பேடு பகுதியில் அமைந்திருக்கும் ஒரு புகழ் பெற்ற முருகன் கோவில் ஆகும்.ஐந்து நிலை ராஜகோபுரம் உடைய இக்கோவிலில் மூலவர் பாலசுப்பிரமணியர் ஆவர். அருணகிரிநாதர் அர்ச்சனை திருப்புகழ் பாடிய இக்கோவில் 500 ஆண்டுகள் பழமைவாய்ந்தது. ஆகும். இக்கோவில் சிறுவாபுரி பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் என்றும் அழைக்கப்பட்டு வருகிறது.

குமரன்குன்றம்
பாலசுப்ரமணியர் கோயில்

குமரன்குன்றம் பாலசுப்ரமணியர் கோயில் என்பது தமிழ்நாடு மாநிலத்தில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் குமரன்குன்றத்தில் அமைந்துள்ள ஒரு முருகன் கோயில் ஆகும். குமரனாகிய முருகன் குடியிருக்கும் குன்றம் என்பதால் "குமரன் குன்றம்" என்று அழைக்கப்படுகிறது. இந்த ஆலயத்தின் மூலவர் சுவாமிநாத சுவாமி என்றும் பாலசுப்ரமணியர் என்றும் அழைக்கப்படுகிறார். அதனால் கோயில் குமரன்குன்றம் பாலசுப்ரமணியர் கோயில் என்றும், குமரன்குன்றம் சுவாமிநாத சுவாமி கோயில் என்றும் அழைக்கப்படுகிறது. இத்தலம் தக்சன சுவாமிமலை எனவும் அழைக்கப்படுகிறது.மூலவர் வடக்கு நோக்கி அருள்பாலிக்கிறார். மூலவர் சுவாமிநாதர், கையில் தண்டம் வைத்து பால வடிவில் காட்சி தருகிறார். இவரது பீடத்திலும், சன்னதி எதிரிலும் யானை வாகனம் இருக்கிறது. உற்சவர் சுப்பிரமணியர் வள்ளி, தெய்வானையுடன் காட்சி தருகிறார். குன்று இருந்த இடத்தினைக் கண்டு காஞ்சிப்பெரியவர் சந்திரசேகர சரசுவதி இக்குன்றில் முருகன் கோயில் அமையும் என்றார். அவ்வாறே சில பக்தர்கள் குன்றை சீர்படுத்திய போது வேல் கிடைத்தது. அதனை வைத்து வழிபாடு செய்தனர். மூலவருக்கு சுவாமிநாதன் என்று பெயரிட்டுள்ளனர்.

குமரகோட்டம்
சுப்பிரமணியர் கோயில்

காஞ்சிபுரம் சுப்பிரமணியர் கோயில் (குமரகோட்டம்) புராணப் பெயர் செனாதீச்வரம் என்று அறியப்பட்ட இது, காஞ்சியிலுள்ள முருகன் கோயில்களில் ஒன்றாகும். கந்தபுராணம் தோன்றிய தலமும், கந்தபுராணம் அரங்கேறிய தலமும் இதுதான். (கந்தபுராணம் அரங்கேறிய கல் மண்டபம் தற்போது கச்சியப்பர் நூலகமாக உள்ளது.) மேலும், அருணகிரிநாதர், பாம்பன் சுவாமிகள் ஆகியோரின் பாடல் கொண்ட இக்கோவில் குறிப்புகள், காஞ்சிப் புராணத்தில் தனிப்படலமாகச் சொல்லப்பட்டுள்ளது.
இத்தலத்தின் நுழைவாயிலில் காட்சிதரும் விநாயகப் பெருமானின் பேர்ருவத்தை தரிசித்து ஆசிபெற்ற பின்பு ஆலயத்திற்குள் செல்கின்றனர். மூலவர் சுப்ரமண்ய சுவாமி ருத்ராட்ச மாலையுடனும், கையில் கமண்டலமும் கொண்டு தரிசனம் தருகிறார். இடப்புறமும், வலப்புறமும் வள்ளி, தெய்வானை தேவியர்கள் தனித்தனி சந்நிதிகள் கொண்டுள்ளனர். அனந்தசுப்ரமண்யர் என்கிற நாகசுப்ரமண்யரின் உலாத் திருமேனி இத்தலத்தின் சிறப்பு மூர்த்தமாகும். மேலும், இவரது வலக்கரம் அபயமாகவும், இடக்கரம் ஊரு முத்திரையும் கொண்ட எழில் தோற்றத்துடன் உள்ளது. நாகசுப்ரமண்யரின் திருமேனிக்கு ஐந்து தலை நாகம் குடை பிடிப்பது போல் நின்றுள்ளதோடு, வள்ளி-தெய்வானை உலாத் திருமேனிகளுக்கு மூன்று தலை நாகம் குடை பிடிப்பது போலும் காட்சிதருகிறது. மேலும், சந்தான கணபதி திருவுருவமும் அழகுற அமைக்கப்பட்டுள்ளது. காஞ்சி ஏகாம்பரநாதர் கோயிலுக்கும், காஞ்சி காமாட்சியம்மன் கோயிலுக்கும் நடுவில் இக்கோயில் தாபிக்கப்பட்டுள்ளதால் இது சோமசகந்தரை பூர்த்திசெய்வது போல் அமைந்துள்ளது.

திருப்போரூர்
முருகன் கோவில்

திருப்போரூா் கந்தசுவாமி கோவில் என்பது இந்தியாவின் தமிழ்நாட்டின், செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூரில் இருக்கும் ஒரு முருகன் கோயில் ஆகும். இக்கோயில் நகரின் மையத்தில் அமைந்துள்ளது. திருபோரூரானது பழைய மகாபலிபுரம் சாலையில் அமைந்துள்ளது. திருப்போரூா் கந்தசாமி கோவில் சுப்பிரமணிய சுவாமி கோவில் என்றும் அழைக்கப்படுகிறது. தமிழ் மொழியில் திருப்போரூா் என்ற தமிழ்ச் சொல்லின் பொருள் "புனிதப் போரின் இடம்" என்பது ஆகும். கந்த புராணக் கூற்றுப்படி முருகப்பெருமான் மூன்று இடங்களில் அசுரர்களை எதிர்த்துப் போரிட்டார். அவை முறையே திருச்செந்தூர், திருப்பரங்குன்றம்,திருப்போரூர் ஆகும். திருச்செந்தூரில் கடல் மார்கமாகவும், திருப்பரங்குன்றத்தில் நில மார்கமாகவும், திருப்போரூரில் ஆகாய வழியிலும் போரிட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இத்திருத்தலத்திலேயே முருகப்பெருமான் தாரகாசுரனை வென்றதாக நம்பப்படுகிறது. பின்பு பல நாட்களாக இத்தலம் கவனிப்பாரற்றுக் கிடந்தது. திருக்கோவில் வரலாற்றுப்படி, முருகப்பெருமான் மதுரை மாநகரிலிருந்த சிதம்பரம் அடிகளாரின் கனவில் தோன்றியதாகவும், தான் திருப்போரிலுள்ள பனை மரத்தினடியில் கேட்பாரற்று இருப்பதாக கூறி மறைந்ததாகவும், கடவுள் உரைத்தபடியே சிதம்பரம் அடிகளார் திருப்போரூர் வந்தடைந்து முருகப்பெருமானின் சிலையை மீட்டெடுத்து திருக்கோவில் அமைத்ததாகவும் சொல்லப்பட்டுள்ளது.